90 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
இந்திய நாட்டை ஆளும் இந்திரா காந்தி அம்மை நிந்தியார் எவரும் என்று நெருக்கடி நிலையை யாக்கிச் சிந்தியா நிலையில் நின்று செந்தமிழ் ஆட்சி மன்றை இந்திரா கலைத்து விட்டார் எடுபிடி சொல்லைக் கேட்டு. கள்ளவிழ் மாலை சூடும் கலைஞரே தமிழர் நாட்டில் வள்ளுவர் கோட்டங் கண்டார் வான்புகழ் அவரைச் சாரும் உள்ளினர் இவ்வா றாக ஒதுக்கினர் கலைஞர் பேரை எள்ளினர் பழிகள் கூறி இகழ்ந்தனர் அறியா மாந்தர். பேரெடு தம்பி என்பார் பெரியவர்; எழுதி வைத்த பேரெடுக் கின்றார் இந்தப் பேதையர்; வள்ளு வன்றன் பேரெடுத் தெறிந்து விட்டால் பெருமறை பிறர்க்கா சொந்தம்? ஆரெடுத் தெறிந்தா லென்ன அவர்புகழ் வளர்ந்தே தோன்றும். நாரெடுத் தெறிந்து விட்டால் நாண்மலர் மணமா போகும்? சேறெடுத் தெறிந்தால் வானிற் செங்கதிர் மறைந்தா போகும்? |