92 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
வைத்திய நாதச் சிற்பி மாதவம் செய்தான் என்று மொய்த்துல குரைக்கும் வண்ணம் மொய்ம்புற முனைந்த மைந்தன் வைத்துள உளியால் இந்த வையமே வியந்து போற்றக் கைத்திறன் காட்டின் நின்றான் கல்லையும் கனிய வைத்தே. கயல்விழிக் கண்ண கிக்குக் களங்கமில் அன்னம் வைத்து மயல்விழி மாத விக்கு மாமயில் ஒன்று வைத்து வியனுல கேத்தும் வண்ணம் வியப்புறும் சிற்பம் செய்தான் பயன்கொள நினையா நெஞ்சன் படைத்தனன் புகாரில் அன்றே. 15.4.1976 |