94 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
உற்றெனை உருத்து நோக்கி, “உலகெலாம் உய்யும் மார்க்கம் தெற்றென உணர்த்தும் வேதம் திருக்குரான் எமதே” என்றான். சிந்தனை முகத்தில் தேக்கிச் சென்றிடும் பொழுதில் என்முன் வந்திடும் ஒருவற் கண்டேன்; வணங்கிய அவனை நோக்கிச் செந்தமிழ் மகனே நின்றன் சீர்மறை சொல்வாய் என்றேன்; “விந்தைகள் மிகுந்து தோன்றும் விவிலியம் எமதே” என்றான். உருக்கிடும் தமிழிற் சொன்ன ஒருமறை அறியா ராகி *அருத்தியில் தழுவிக் கொண்ட அயலவர் மறையே சொன்னார்; திருக்குறள் எங்கள் வாழ்க்கைத் திருமறை என்று கூற ஒருத்தரை இங்குக் காணேன் உய்யுமோ தமிழர் நாடு? 20.7.1978
*அருத்தி - விருப்பு |