264 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
ஆடரங்கம் போர்க்களமே அவனுக் காகும் ஆர்த்துவரும் மறப்படைகள் பொம்மை யாகும்; கூடரங்கில் வெட்டுண்ட பகைப்பு லத்தார் குறையுடலம் எழுந்தெழுந்து குதிக்குங் காட்சி நாடகங்கள் போலவற்கு மகிழ்ச்சி நல்கும்; நாளெல்லாம் இஃதொன்றே தொழிலாக் கொண்டு நாடனைத்தும் பணிவித்தான்; மூவ கத்தின் நற்பெயரே மிகுவித்தான்; புகழ்கு வித்தான்.10
பார் - நிலம். |