பக்கம் எண் :

290கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

கொவ்வையிதழ் காணுங்கால், பெண்மை விஞ்சு
      கோதையர்க்கும் வாயூறும்; விழிகள் கண்டால்
நவ்வியினம் வணங்கிவரும்; தோள்கள் காணின்
      நங்கையரும் மயங்கிடுவர் தமைம றந்தே!65

நாடாளும் பலமன்னர் மணப்பான் வேண்டி
      நான்நீஎன் றடுத்தடுத்தெம் நாட்டில் வந்து
கூடாரம் அடித்ததுதான் மிச்சம் அந்தோ!
      கூடாகி ஓடாகித் தம்மூர் மீண்டார்;
கூடாது திருமணமே எனம றுத்துக்
      கோலமயில் இளவரசி கூறி விட்டாள்;
சூடாத மலர்பூத்த பருவ மங்கை
      சூடுபெயர் வேல்விழியாம் ஐய!’ என்றாள்.66


நவ்வி - மான்