| 292 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
வீரத்தின் உறைவிடமாய் விளங்கும் வீரன் வியன்புகழைப் போர்த்திறனை அழகை யெல்லாம் சேரத்தன் இருசெவியால் நாளும் கேட்டுச் சிந்தைக்குள் அவனைஒரு தெய்வம் ஆக்கி, நேரத்தை எதிர்நோக்கி நிற்கின் றாள்தன் நிகரில்லா இளமைஎழில் படைப்ப தற்கே; நேரிற்கண் டறியாதாள் அவனை நேற்று நீள்விழியாற் கண்டுமனங் குளிர்ந்து நின்றாள்.70 காண்போமோ காணோமோ என்று நாளும் கலங்கிமனங் குமைந்துடலம் மெலிந்து வந்த நாண்பாவை நெருநலவன் திருவோ லக்கம் நண்ணுங்கால் கண்குளிர உளம்பூ ரிக்கச் சேண்மேவு கன்னியர்தம் மாடம் நின்று சேல்விழியால் அவனெழிலைப் பருகி நின்றிவ் வாண்போல யாவருளார் எனவி யந்தே அவளைமறந் தியம்பினள்காண்’ என்றாள் தோழி.71
சேண் - உயரத்தில் |