பக்கம் எண் :

300கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

வியந்திருக்கும் தோழியின்பால் ஓடி வந்து
      விளையாட்டுப் பிள்ளைஎனக் கன்னங் கிள்ளி,
‘நயந்தவனை நானடையும் பேறு பெற்றேன்;
      நற்றவத்தின் பயன்நுகரும் வாழ்வு பெற்றேன்;
உயர்ந்ததொரு பேறிதன்மேல் உண்டோ? தோழி!
      ஒளிவிளக்கை என்னுளத்தில் ஏற்றி விட்டாய்!
பயந்தவரும் இசைந்துவரச் செய்தல் நின்றன்
      பாரமடி நேரமிது நல்ல’ தென்றாள்.89


பயந்தவர் - பெற்றோர்,