306 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
மாலைவரும் எனவுரைத்த குறியி டத்தில் மன்னவன்றன் குலக்கொழுந்தைக் காண வில்லை; பாலைநிகர் மொழியுடையாள் வாரா தேகின் பாலைநிகர் வாழ்வாகும் என்றன் வாழ்வு! மாலையவள் நிற்பளெனச் சொன்னாள் தோழி மயக்குறுத்தும் சிலையைத்தான் மொழிந்தாள் போலும்! மாலைஎனைச் சூட்டுவளென் றெண்ணி நின்றேன் மாலைஎனக் குண்டாக்கி நின்று விட்டாள்!’102 எனப்புலம்பும் ஏறனையான் நிலைமை கண்ட இளவரசி நகைத்துவிடத் திகைத்தான் வீரன்; மனக்குழப்பம் மிகவாகிச் சிலைசி ரித்த வகையென்ன எனும்வியப்பால் உற்று நோக்கித் தனக்குவந்த மயக்குக்கு நாணி விட்டான்; தையலிவள் மையல்தரும் சிலைபோல் நின்றாள் எனக்கலங்கிப் பினர்த்தெளிந்து நெருங்கிச் சென்றான்; இறும்பூது கொண்டுயிர்த்து நிலைத்து நின்றான்.103
இறும்பூது - வியப்பு |