பக்கம் எண் :

310கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 28

தந்தையிடம் இசைவுபெற முடிவு செய்து
தணியாத காதலொடு பிரிந்து சென்றார்.

‘புலரட்டும் முடிவொன்று காண்பேன்’ என்று
      புலியனையான் புகன்றமொழி கேட்டுப் பூவை
‘மலரட்டும் மணமுரசம் என்ப தல்லால்
      மருவட்டும் போர்முரசென் றுரைத்தல் நன்றோ?
பலரட்டுக் குவிப்பதிலா மணநாள் வேண்டும்?
      பற்றிருக்க உறவிருக்கப் பரிவி ருக்க
மலரொட்டும் மணமாலை சூடி நிற்க
      வழியிருக்க அதைவிடுத்துப் பகையா வேண்டும்?115

போருக்கு முனைந்துவிடின் ஒருபால் தந்தை!
      புலியனைய காதலன் நீ மறுபால் நிற்பை!
யாருக்கோ இழப்பென்று நினைத்தாய் போலும்!
      எனக்கதிலோர் மணநினைவா மகிழ்வா தோன்றும்?
ஊருக்கும் பழிப்பாகும்; அதனால் நானே
      உயிர்த்தோழி துணைகொண்டு தந்தை யின்பால்
நேருக்கு நேருரைத்து மணமு டிக்க
      நேயமுடன் இசைவுபெற முயல்வேன்’ என்றாள்.116

‘உனையடைய வேண்டுமெனும் நோக்கம் ஒன்றே
      உந்துவதால் என்னியல்பால் உரைத்து விட்டேன்;
எனையடைய உனக்கிசைவு தந்தை தந்தால்
      எனக்கதன்மேல் பேறுண்டோ வெல்க’ என்றான்;


அட்டு - கொன்று