பக்கம் எண் :

வீரகாவியம்311

மனையடையும் நேரம்மிக ஆயிற் றென்று
      மதிவந்து முகங்காட்டப் பிரிந்து செல்லத்
தினையளவும் மனமிலராய் விலகிச் சென்றார்;
      திருமணத்து நினைவுடனே துயிலச் சென்றார்.117

நஞ்சுமிழும் முழுமதியை வானிற் கண்டார்;
      நலிவுதரும் தென்றலெனும் காற்றைக் கண்டார்;
பஞ்சணையின் பெயராலே விரித்து வைத்த
      பாழ்நெருஞ்சிப் பரப்பினையே அங்குக் கண்டார்;
விஞ்சுமணப் புகைபரவ, வெய்து யிர்த்து
      விடும்புகையாய் அதுபரவிச் சூழக் கண்டார்;
வெஞ்சரமாய்ப் பூச்சரங்கள் தெரியக் கண்டார்;
      விழிகுவியாக் கனவுலகில் மிதந்து சென்றார்.118

காட்சிப்படலம் முற்றும்.


சரம் - அம்பு