பக்கம் எண் :

312கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

திருமணப் படலம்

பூமருவு மணமாலை பூண்டு நெஞ்சுட்
புகுந்திருவர் ஒருவரென ஆகி நின்றார்
தாமரையும் மணமுமென இல்ல றத்தில்
தாமிணைந்தோர் அணிகலனாய் விளங்கி நின்றார்.

இயல் - 39

-திருமணப்படலம்163.