314 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 30 தந்தையின்பால் தூதுரைத்து மீள்க என்று தலைத்தோழி தனையனுப்பி நின்றாள் மங்கை. படியினுக்குள் புதுமலர்ச்சி பரவக் கண்டு பாவைமனம் புத்துணர்ச்சி நிரம்பக் கொண்டாள்; கொடியிருக்கும் மலரனைத்தும் கூந்த லுக்குள் குடியிருக்கும் படிவைத்தாள்; தோழி தன்னைக் கடிதழைத்தங் கருகமர்த்தி நெருநல் மாலை கரைகாணாக் கனவுலகில் வீர னோடு கொடிபிடித்துக் கற்பனைத்தேர் ஊர்ந்த வெல்லாம் குறையாமல் சிதையாமல் உரையா நின்றாள்.121 ‘எனையளித்த தந்தைக்குச் செய்தி சொல்லி எதிர்மறையால் விடையின்றி உடன்பா டாக்க முனைவதுநின் கடனாகும்; நீநி னைத்தே முயலுவையேல் முற்றாகும் எச்ச மில்லை; நினைவிடுத்தால் எனக்குதவ யாரே உள்ளார்? நேரிழையே நின்பெயரை வாழ்த்தி நிற்பேன் வினைமுடித்துத் திரும்’பெனவேல் விழியு ரைத்தாள்; வேண்டுதியோ உடன்படுமெய்’ என்றாள் தோழி.122 ‘கலக்கத்தாற் குழம்புமெனை விளங்கக் கூறிக் கனிமொழியால் தெளிவுறுத்த முனைத லின்றி, இலக்கணத்தாற் குழப்புகின்றாய்! புரிந்து கொள்ள இந்நிலையில் இயலுவதோ?’ என்றாள் செல்வி;
படி - பூமி நெருநல்-நேற்று 122ஆம் பாடலில் இலக்கணச் சொற்கள் நயம்பட வந்துள்ளன. |