‘குலக்கொழுந்தே! உயிரிரண்டு கூடுங் காலைக் கூட்டுவிக்கும் உடன்படுமெய் போல உங்கள் இலக்குடைய உயிரிரண்டைக் கூட்டு விக்கும் எழில்மணத்தை அப்பெயராற் குறித்தேன்’ என்றாள்.123 ‘புணர்ச்சிக்கு விதிசொல்ல வல்லாய்! எங்கள் புணரியற்கும் விதிசெய்ய வேண்டும்; தந்தை உணர்ச்சிக்கு வயமாகி மறுக்கா வண்ணம் உரைக்குமுறை யாலுரைத்து, வீரனுக்கே இணர்த்தொடையல் நான்சூட்டி மணமே கொள்ள, இசைவிப்பாய்; என்னுயிர்நின் கையிற் றந்தேன்; துணர்க்கொடியின் இடையுடையாய்! தூதுசென்று துணைதருமோர் மங்கலச்சொற் கொணர்க’ என்றாள்.124
உடன்படுமெய் - இரண்டு உயிரைச் சேர்த்து வைக்கும் மெய்யெழுத்து, புணர்ச்சி இலக்கணப்புணர்ச்சி புணரியல் - தலைவன் தலைவியர் கூட்டம் இணர்த்தொடையல் - பூங்கொத்து மாலை துணர் - பூங்கொத்து. |