316 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 31 வேந்தன்பால் தூதுரைக்கச் சென்ற தோழி வேல்விழிக்கு மணமுடிக்க வேண்டி நின்றாள். மாதுக்குத் தந்தைவயத் தரசன் பாங்கர் மாவேழன் வேல்விழியின் மணமு டிக்கத் தூதுக்கு நேர்ந்துசெலும் தோழி, மன்னன் துய்யமணி மண்டபத்தில் தனித்தி ருக்கும் போதுக்கு வந்தெதிரே தொழுது நின்றாள்; புன்னகையால் வாழ்த்தியவன் அவளை நோக்கி, ‘யாதுக்கு வந்தனைநீ? நின்னு ளத்தில் என்விழைந்தாய்? விளம்புதியேற் பெற்றாய்’ என்றான்.125 ‘உரைபிறழாச் செங்கோன்மை உடையோய்! என்றன் உள்ளத்தை உரையாமுன் பெற்றாய் என்றாய்; கரையறியாப் பேருவகை நெஞ்சிற் பாயக் காண்கின்றேன் என்கருத்து முற்றிற் றென்றே; விரைபிரியா மலர்பூத்துக் குலுங்கும் முல்லை வியன்கொடிதான் படரஒரு கொழுகொம் பின்றித் தரைதனிலே கிடந்திடுமேல் வளர்ச்சி யுண்டோ? தவித்திருக்கக் காண்பதுதான் நமக்கும் நன்றோ?126 இளமைஒரு நிலையுடைய பருவ மன்றே; இருநிலத்தில் அப்பருவம் உயர்ந்த தொன்றாம்; வளமையினை நுகர்ந்தின்பம் துய்த்த லின்றி வறிதொழிய விட்டுவிடல் இயல்பும் அன்று; களமர்வயல் பருவத்தே பயிர்செய் யாரேல் கண்காணப் பயனொன்றும் தருவ தில்லை; களகளவென் றாழியினுள் மழைபொ ழிந்தால், கானகத்து நிலவெறிந்தால் எவர்க்கு நன்மை?’127
விரை - மணம் களமர் - உழவர் |