பக்கம் எண் :

318கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 32

மணமகன் யாரென அறியா மன்னன்
கனலெனச் சீறிக் கடுமொழி பகர்ந்தான்.

மன்னவன்றன் உரைகேட்ட தோழி ‘ஐய!
      மன்றலுக்கு மனமொப்பி விட்டாள் தையல்’
என்னலுமவ் வயத்தரசன் களிப்பின் மூழ்கி,
      ‘என்னோற்றேன் இனியமொழி இதனைக் கேட்க!
மின்னனைய இடையுடையாள் எழிலுக் கேற்ற
      மேலவனைத் தேர்ந்தெடுத்து மணமு டிப்பேன்;
நன்னகருள் மணமுரசம் விரைவில் கேட்பாய்;
      நலியுமென்றன் கலியகன்ற தின்றே’ என்றான்.132

‘கன்னிமகள் வாழ்க்கைக்குத் துணையைத் தேடிக்
      கலங்குநிலை நினக்கில்லை; தன்ம னத்தே
உன்னியுளள் ஒருவனைத்தான்; அவனோ பாரில்
      ஒப்பரிய செப்பரிய வீர னாவன்;
மன்னவநீ அன்னவற்கு மகளைத் தந்தால்
      மாநிலத்துப் பெருமையெலாம் நின்னைச் சாரும்’;
என்னுமொழி செவிபுகுதா முன்னர் வேந்தன்
      ‘எந்நாட்டிற் கரசனவன் இயம்பு!’ கென்றான்.133

‘நாட்டினுக்கோர் அரசனலன்; நாடாள் வோர்க்கு
      நற்றுணையாம் அமைச்சுமலன்; அவரை யெல்லாம்
ஆட்டிவைக்கும் பெருவலியன் அழகன் வீரன்
      அன்னவற்கே தன்மனத்தைப் பறிகொ டுத்தாள்;


என்நோற்றேன் - என்னதவம் செய்தேன்.