பக்கம் எண் :

வீரகாவியம்319

சூட்டுதற்கு மணமாலை அவனை யன்றித்
      தொல்லுலகில் எவருமிலர்’ என்றாள்; மன்னன்
வாட்டமொடு, ‘நங்குலத்து மரபை மீறி
      வழக்கமிலாச் செயல்புரிய நினைந்தாள் கொல்லோ? 134

இவளழகில் மனமயங்கித் தவங்கி டக்கும்
      இளவரசர் பலரிருந்தும் மதியா ளாகி,
எவனொருவன் தனைநினைந்தோ மறுகு கின்றாள்?
      இகழ்ச்சிசொலும் பான்மைக்கோ இடங்கொ டுத்தாள்?
தவறுசெயும் துணிவிவட்கு வந்த தேயோ?
      தன்னிளமைப் பருவத்தால் விளைந்த தேயோ?
எவருடைய தூண்டுதலால் இதனைச் செய்ய
      ஏந்திழையிங் கொருப்பட்டாள்?’ எனக்க னன்றான்.135

மீண்டுமவன் விழிசிவந்து, ‘மன்ன ருக்குள்
      மீக்கூர்ந்த புகழுடையான் ஒருவற் றேர்ந்து
பூண்டருதோள் புணர்மாலை சூடச் செய்வேன்;
      போபோஅவ் விளையாட்கும் இதனைக் கூ’றென்
றாண்டுமுறை செயுமன்னன் ஆணை யிட்டான்;
      அப்பனெனும் முறைமறந்தான்; தோழி அஞ்சி,
‘ஆண்டகைநின் சொல்லுக்கோர் அட்டி யுண்டோ?
      ஆயினுமென் பணிந்துரைக்குச் செவியீ’ கென்றாள்.136


மீக்கூர்ந்த - மேம்பட்ட. பூண்தருதோள் - அணிகலன்களையுடைய தோள்.