பக்கம் எண் :

வீரகாவியம்321

‘நேரிழையே என்மனத்தை உருக்கி விட்டாய்!
      நெறிதடுமா றாவண்ணம் திருப்பி விட்டாய்!
ஆருயிர்போல் வளர்த்தவளைத் தகுதி யில்லா
      ஆருக்கோ கொடுப்பதெனின் பெற்ற நெஞ்சம்
கூரெரியின் மெழுகாகி நையு மன்றோ?
      குழம்புமெனை என்செய்யக் கூறு கின்றாய்?
சீரெதுவோ அதுசெய்ய ஒப்பு கின்றேன்;
      சிறியவட்கு மணமுடிந்தாற் போதும்’ என்றான்.140