பக்கம் எண் :

322கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 34

வேல்விழி காதலன் வேழன் றானெனச்
சேல்விழித் தோழி செப்பினள் அவற்கே.

‘மங்கையர்க்குள் அரசியென விளங்கும் நின்றன்
      மகளுளத்தைக் கவர்ந்தானோர் காளை என்றால்
இங்கவனைத் தகுதியிலான் எனநி னைக்க
      இயலுவதோ? அவளைத்தான் எளிய ளாக
எங்ஙனம்நீ நினைந்தனையோ? மணமே வேண்டா
      திருந்தமகள் இளவரசி காதல் கொண்டு
கொங்கலரும் மலர்த்தொடையல் சூட்டு தற்குக்
      குறிக்கொண்டாள் எனினதுதான் புதுமை யன்றோ?141

பேரரசர் அரிதின்முயன் றாலுங் கிட்டாப்
      பெரும்பேறு நீபெற்றாய்! வேந்த ரெல்லாம்
வீரனிவன் பெயர்கேட்பின் நடுங்கி நிற்பர்;
      வெலற்கரிய வலியுடையான்; களிறு சூழ்ந்து
பாரதிரப் போரெதிர்ந்து வரினும் அஞ்சான்
      பாய்ந்தவற்றைப் பரபரவென் றிழுத்துச் சாய்த்துக்
காரதிரும் இடியேறென் றார்த்து நிற்பான்;
      கட்டழகும் கட்டுடலும் ஒருங்கே பெற்றான்.142

கற்பாறை பலவுருட்டி, நெடிதின் ஓங்கு
      கருமரங்கள் அடிபெயர்த்துச் சீறிப் பாய்ந்து,
முற்போகும் கான்விலங்கை எதிர்த்துத் தாக்கி,
      முழுவலியும் கெடஇழுத்து, வாகை சூடி
நிற்பாரின் பேரொலிபோல் ஆர்த்துச் செல்லும்
      நிறைவெள்ளப் போக்குடைய புனலா றென்னும்
சொற்பேரால் வழங்கிவரும் ஆற்றின் தென்பால்
      சூழ்மதில்சேர் மூவகமே அவன்நா டாகும்.143


கொங்கு - தேன்