பக்கம் எண் :

வீரகாவியம்323

அரியணையும் செங்கோலும் மணிவி ளங்கும்
      அணிமுடியும் வெண்குடையும் அவனுக் கில்லை;
உரிமையுடன் ஆட்சிசெய நாடும் இல்லை;
      உண்மைநிலை இதுவெனினும் அவற்றை யெல்லாம்
அரசர்தமக் களிப்பதுவும், தற்ப கைத்தால்
      அழிப்பதுவும் அவன்கையில் இலங்கும் வாளே;
அரியனையான் மாவேழன் என்னும் பேரான்;
      அரசருள்ளும் அவன்போல்வார் யாரே உள்ளார்?144

பெருந்திறலன் அவனுக்கே மாலை சூட்டப்
      பெட்புடன் மனத்தகத்தே உறுதி பூண்ட
முருந்தனைய நகையுடையாள் பிழையோ செய்தாள்?
      மொய்ம்புடையான் அவன் தகுதி இலனோ? சொல்வாய்!
விருந்தினனாய் நங்கோயில் அகத்து வைகும்
      வேழன்றன் உறவுபெற விழையாய் கொல்லோ?
திருந்தயில்வேல் மன்னநின துள்ளம் யாதோ?
      தெள்ளிதின்நீ ஆய்ந்தெனக்குச் செப்பு’ கென்றாள்.145


முருந்து - மயிலிறகின் அடிப்பகுதி