பக்கம் எண் :

328கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 38

வயத்தரசன் வேண்டுமொரு வாய்மொ ழிக்கும்
மாவேழன் மனமுவந்தே இசைவு தந்தான்.

புலர்காலைப் பொழுதத்தின் வரவு கண்டு
      பூரித்த வயத்தரசன் விரைந்து சென்று
மலர்மாலை வயங்கிருதோள் வேழற் கண்டு
      மகளைமணங் கொள்கவென வேண்டி நின்றான்;
‘நலமாரும் என்புரவி தேடி வந்தேன்
      நான்தருவேன் நின்துணையை* என்று ரைத்தாய்!
பலர்சூழ உரைத்தமொழி வாய்த்த தைய!
      பாவையைஎன் துணையாகக் கொள்வேன்’ என்றான். 157

‘பெருவலியன் ஒருவனைஎன் மருக னாகப்
      பெறுவதன்மேல் மகிழ்வுளதோ? ஆனால் நீதான்
சிறியஒரு வாக்குறுதி தருதல் வேண்டும்;
      சீறுபகை கொண்டிரண்டு நாடுந் தம்முள்
பொருநிலையை எய்துமெனில் இவள்தான் இந்தப்
      பொன்னாட்டை விட்டகலல் கூடா’ தென்றான்;
திருமகளை மருவுவதில் மயங்கி நிற்கும்
      திண்ணியனவ் வுறுதிமொழிக் கிசைவு தந்தான்.158


*54ஆம் பாடலை நோக்குக.