காய்ச்சியநல் லாவின்பால் கொண்டு வந்து கைக்கொடுத்தாள் உயிர்த்தோழி; பாலை வாங்கி வாய்ச்சிறிது வார்த்தவுடன் கடிந்து கொண்டாள்; வாழ்கின்றார் காதலர்தாம் எனது நெஞ்சுள், போய்ச்சுடுமென் றறியாயோ? விஞ்சும் சூடு போகாமல் கொணர்ந்தனையே! போபோ என்று வேய்ச்சிறுமென் தோளுடையாள் சினந்தாள் ஓர்நாள்; வேறறிய வொண்ணாமல் ஒன்றி நின்றாள்.181 |