340 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 44 மணிவயிற்றில் வளர்மகவு ஆணே என்று மாவேழன் கற்பனைத்தேர் ஊர்ந்து சென்றான். பிறந்தவுடன் அவனையிரு கையால் வாரிப் பெட்புடன் நான் வழங்கிடுவேன் முத்த மாரி; திறந்தஎன தகல்மார்போ டணைத்துச் சென்று சீரியஎன் போர்க்களத்திற் கிடத்தி, மண்ணிற் பிறந்தவனே! இம்மண்ணே உனக்கு வாழ்வு; பெருவீரங் காட்டியிதைக் காத்தல் வேண்டும்; இறந்தாலும் களத்தேதான் இறத்தல் வேண்டும்; எனவாழ்த்தி வீரத்தை ஊட்டிக் காப்பேன்.189 மரத்தாற்செய் சிறுதேரும் குதிரை யானை வகைகளுடன் விளையாடத் தருவேன்; மேலும் உரத்தால்வெம் புலியோடும் சிங்கத் தோடும் உடன்றுபொரச் சிறுவேலும் வாளும் ஈவேன்; மறத்தோள்கள் திரண்டுருளும் பருவம் வந்தால் மற்போரும் விற்போரும் வாள்சு ழற்றும் மறப்போரும் திறத்தோடு பயிற்று விப்பேன்; மாமல்லர் போர்க்களமே பள்ளி யாகும்.190 போர்க்களத்தில் தேரூர யானை ஏறப் புரவிமிசைப் பாய்ந்தேறப் பயிற்று வித்துப் பார்த்தலத்தில் இக்கலையில் இவனைப் போலப் பார்த்ததிலை எனப்பகர வளரக் காண்பேன்; ஆர்க்கின்ற அரியேறு பலவந் தாலும் அஞ்சாது பொருதழிக்கும் ஆற்றல் கொள்வான்; கார்க்களிற்றின் இடைப்புகுந்து துதிக்கை பற்றிக் கரகரவென் றவன்கழற்றும் வலியன் ஆவான்.191
பெட்பு - விரும்பு. பள்ளி - பள்ளிக்கூடம். கார்க்களிறு - மேகம்போன்ற யானை |