பக்கம் எண் :

342கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

என்றவள்தன் மனத்தகத்தே எண்ணிக் கொண்டாள்;
      இரும்பனைய மாவேழன் நாள்கள் எண்ணித்
துன்றமரில் பொருதுவரும் மகனைக் காணத்
      துயிலாத பெருங்கனவு கண்டி ருந்தான்;
என்றுவரும் என்றுவரும் அந்த நன்னாள்
      எனவேங்கி இருவருமே நோக்கி நிற்க,
ஒன்றொன்றாய் நாள்வளர உரிய காதல்
      ஒளிவிளக்கம் அவள்வயிற்றில் வளர்ந்த தம்மா!196