பக்கம் எண் :

344கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

மென்புறத்தைத் தைவந்து, கையி ரண்டால்
      மெல்லியலைக் கைப்பற்றி, அவள்மு கத்தைத்
தன்விரலால் மேல்நிமிர்த்திப் பிரிவை நெஞ்சம்
      தாங்காமல் கண்பொழியும் நீர்து டைத்தான்;
அன்புதவழ் இருவிழியால் அவளை நோக்கி
      அலர்பொதியும் கார்குழலைக் கோதி விட்டான்;
தன்புதிய வாழ்வுக்குத் துணையாய் நின்ற
      தையலுக்குக் கனிமொழிகள் பலவு ரைத்தான். 200


தைவந்து - தடவி, கார்குழல் - கரியகூந்தல்