‘கண்திறந்து விடைதந்தாய், நின்றன் கொவ்வைக் கனிதிறந்து மனந்திறந்து தந்தா யல்லை; மண்பிறந்த காலத்தே வாய்த்த வீரம் மாற்றலர்க்குக் காட்டுதற்கே செல்லு கின்றேன்; பெண்பிறந்தால் இவ்வணியைக் கழுத்திற் கட்டு; பெறுமகவு மகனானால் கையிற் கட்டு; கண்பொழுதுங் களையாமல் அணிந்தி ருப்பின் காளையவன் பெருவலியும் புகழுங் கொள்வான்.’206 நயந்துரைகள் இவ்வண்ணம் பலவுங் கூறி, நாட்படுமோர் பொன்னணியை அவட்க ளித்து, வயந்தநகர் வீரர்சிலர் கவர்ந்து சென்று வயத்தரசன் ஆணையினால் மீண்டும் தந்த வயங்கெழுமு கடுநடைய பரிமா வேறி வாள்வீரன் தன்திசையிற் பறந்து சென்றான்; மயங்கியவள் கட்புலனுக் கெட்டுங் காறும் மாவேழன் செலுந்திசையை நோக்கி நின்றான்.207
கண்பொழுது - இமைப்பொழுது. வயம் - வெற்றி. |