| 350 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
உள்ளத்தால் உவந்தென்னை விழையா ராகி உண்மைஎன நம்பும்வணம் சொல்லால் மட்டும் கள்ளத்தால் காதலித்த கள்வ ரைத்தான் காணத்தான் போகத்தான் துடிக்கும் கண்ணை எள்ளத்தான் வெறுக்கத்தான் நினைவு தோன்றும்; இருவிழியும் துயிலைத்தான் எய்தி நின்றால் மெள்ளத்தான் வருங்கனவில் அவரைக் கண்டு விளம்பிடுவேன் துயரைத்தான் துயிலே இல்லை.215 சிலபொழுது செயலிழந்து விழிகள் சோரும்; சிறியஒரு கனவுவரும்; கனவில் என்றன் குலமகனும் தொடவருவான்; ஆர்வத் தோடு கொடுந்துயரைச் சொலஎழுவேன் மறைந்து போவான்; நலமழியும் என்தோளில் உறைந்தி ருப்பான் நனவுடைய கனவதனில்; விழித்து நோக்கின் புலனறிய முடியாமல் நெஞ்சுக் குள்ளே போய்ப்புகுந்து கொள்கின்றான்; யாது செய்கேன்?216 தென்றலுனக் கென்னபிழை செய்து விட்டேன்? தீயாக வீசுகின்றாய்; கொழுநர் ஓர்நாள் முன்றிலிடத் தருகிருந்து காதல் கொண்டென் முகத்தெழிலைப் புகழுங்கால் நிற்ப ழித்தார் என்றதற்கோ முழுநிலவே நெருப்பே போல எரிகின்றாய் சொரிகின்றாய் அனலை அள்ளி; கொன்றொழித்தாற் குற்றமிலை கொல்லா தென்னைக் குற்றுயிராக் கிடத்திடவோ விரைந்து வந்தாய்?217 மருண்மாலைப் பொழுதேநீ அளிக்கத் தக்காய்; மங்கும்நிலை உனக்களித்த மாயன் யாரோ? அருண்மாலை எனக்களித்த காதல் மன்னன் அயலாகிப் பிரிந்ததனால் மங்கி என்றன் உருமாறி நிலைமாறிக் கலங்கு கின்றேன்; உனக்கொருவன் இவ்வண்ணம் செய்தான் போலும்;’ பொருண்மாறித் தடுமாறி இவ்வா றாகப் பொழுதெல்லாம் புலம்புவதே தொழிலாக் கொண்டாள்.218
எள்ள - இகழ, நிற்பழித்தார் - நின்னைப்பழித்தார். அளிக்க - இரங்க. அருள்மாலை - அன்புமயக்கம். |