| 352 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 50 வேழனைப் பழித்த தோழியை மறுத்து வேல்விழி புகழ்மொழி விளம்பினள் உருத்து பொறுமையுடன் கேட்டிருந்த தோழி நெஞ்சுட் புன்னகைத்து வேல்விழிக்குத் தகுந்த வண்ணம் மறுமொழிகள் புகல்வதுபோற் பொய்ம்மை யாக மாவேழன் இயல்பதனைப் பழித்து ரைத்தாள்; ‘தறுகணன்பால் தண்ணளியும் இருக்கும் என்றால் தாவுமுயற் குட்டிக்கும் கொம்பி ருக்கும்; வெறியனவன் போருக்கே உரிய னாவான் விளங்கிழையார் காதலுக்குத் தகுதி யாகான்.222 தினவெடுத்த திண்டோளன்; கண்ணும் மண்ணும் தெரியாமற் சமர்விளக்கும் கூர்வாய் வாளன்; சினமடுத்த மடங்கலெனக் கூச்சல் செய்வான் சிந்தையிலே மென்மைக்கோர் இடந்தான் உண்டோ? கனவகத்தும் மெல்லியல்நின் துயரங் காணான்; கடுந்துயரக் கடலுக்குள் தள்ளி விட்டான்; புனமடுத்த களிறனையான் மனமே யில்லான்; பொய்யனவன்’ எனஅவனை இயற்ப ழித்தாள்.223 ‘என்பால்நீ கொண்டிருக்கும் அன்பால் என்றன் இன்பத்துத் தலைமகனை இகழேல் தோழி! வன்பாகவ் வினியானைக் கருணை யில்லான் வஞ்சமுளான் என்றெல்லாம் பழிகள் கூறேல்; மென்பாலால் பிரிவதனைத் தாங்கும் ஆற்றல் மேவாத தென்குற்றம்; வலிய னேனும் அன்பாலே தலையளிகள் புரிந்த வெல்லாம் அறிவாயோ நீதோழி! அவனென் செய்வான்?224
பினற்றுகின்ற - புலம்புகின்ற |