எனக்குமவன் தாய்நாடு தனக்கும் நெஞ்சுள் இடமளித்தான் சமமாக; பெற்ற நாடு தனக்குமொரு நிகர்பங்கே செய்து தந்தோன் தாய்நாடு துயருறுங்கால் தரியா னாகி முனைத்தெழுந்து களஞ்சேர்தல் முறைமை யன்றோ? மூவகத்தான் பிரிவாற்ற இயலே னாகிப் பினற்றுகின்ற நிலைக்கிரங்கி அவற்ப ழித்தாய்! பேதையினி அப்பிரிவைப் பொறுப்பேன்’ என்றாள்.225 |