| 354 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 51 பத்துத் திங்கள் முற்றிய பின்னர் முத்துப் பிள்ளை பெற்றனள் அவளே. ‘பிரிந்தவனும் இவண்வருவான்; திங்கள் நான்கில் பேரெழிலாய் மகன்வருவான்; பிரிவுத் துன்பம் இரிந்தொழியக் கண்டின்பக் கடலுள் மூழ்கி எந்நாளும் திளைத்திருப்பேன்’ என்ற எண்ணம் விரிந்துளத்திற் பொருந்துவதால் துயரந் தாங்கி விரிதோகை மயிலனையாள் களித்தி ருந்தாள்; சரிந்துமணி வயிறணிந்து மாதம் பத்துச் சரியாக நிறைந்துவர வயவு கொண்டாள்.226 இடைவலியால் அவளுழன்றாள்; அவ்வ யாவால் இணர்க்கொடிபோல் துவண்டுதுவண் டரற்றிநின்றாள்; உடைநெகிழ வெய்துயிர்த்தாள்; வியர்த்தாள்; வாயால் ஓவென்று குரலிட்டாள்; ஓங்கிக் கட்டில் அடைவுறுமெல் லணையின்மே லடித்துக் கையால் அதனைமிகப் பிசைந்தயர்ந்தாள்; மஞ்சம் பற்றிப் பெடைமயிலாள் உடல்தளர்ந்து நெளிந்தாள்; பிள்ளை பெறுவதன்முன் தாயர்படுந் துயரம் என்னே!227 காதலனைக் கூடுங்கால் இன்பங் கண்டாள்; கருவுற்ற நாள்முதலா உயிர்க்குங் காறும் வேதனைகள் பலகொண்டாள்; இன்ப துன்பம் வியனுலகில் மாறிவரும்; இயற்கை ஈதே; மாதவளும் துன்புற்ற பின்னே என்றும் மாறாத இன்பத்தைப் பெற்றெ டுத்தாள்; போதவிழும் மலர்முகத்தாள் தாய்மை கொண்டாள் பூங்கொடியில் அரும்பொன்று பூக்கக் கண்டாள்.228
இரிந்து - நீங்கி. வயவு - பேறுகாலத்துயர். பெடைமயில் -பெண்மயில். |