பக்கம் எண் :

360கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

வேட்டைஎனிற் பெருவிருப்பம்; கான்வி லங்கின்
      வேந்தனெனில் தனிவிருப்பம்; முழக்கம் ஒன்று
கேட்டுவிடின் உருமுழக்கம் இவனும் செய்வான்;
      கிளர்ந்தெழுவான்; ஆதலினால் இளைஞ ரெல்லாம்
வேட்டெழுந்து படையென்னத் திரண்டு தம்முள்
      வீரனிவன் தலைவனெனத் தேர்ந்து கொண்டார்;
காட்டுகின்ற பெருவலியால் கார்மு ழக்கால்
      கண்டவர்தாம் கோளரிஎன் றழைக்க லுற்றார்.244


உரும் முழக்கம் -இடிமுழக்கம்.