362 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
எனப்பலவும் கசிந்துருகிச் சொல்லி நையும் இளையவற்குத் தேற்றரவு சொல்லி, ‘ஐய! தினைத்துணையும் நின்முகத்தில் துயரம் ஒன்றும் தெரிந்ததிலை; இன்றதனை மதிமு கத்தில் பனைத்துணையாக் காண்கின்றேன்; என்றும் மாறாப் பால்வண்ணச் சிரிப்பெங்கே? இந்தக் கோலம் உனக்கெதற்கு? விட்டுவிடு! பெற்ற பிள்ளை உறுதுயரம் பொறுக்குமுரம் இல்லேன்’ என்றாள்.248 ‘தந்தைபெயர் தெரியாத மைந்த னுக்குத் தரையிலொரு பீடுநடை மகிழ்ச்சி ஏது? சிந்தைதனில் குழப்பங்கள் சூழும் போது சிரிப்பேது? வீரந்தான் விளைவ தேது? வெந்துயரம் துடைக்கஉனக் கெண்ணம் உண்டேல் விளைந்தவெலாம் மறைப்பின்றிச் சொல்க! இன்றேல் நொந்தழிய விட்டுவிடு! சாவ தற்கு நூறுவழி உண்டறிவேன்; என்றான் மைந்தன்.249
தேற்றரவு - ஆறுதல் |