364 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
தாயகத்தைக் காப்பதற்கே தணந்து சென்றார்; தரியலர்தம் போர்முனையில் படைந டாத்தப் போயவர்க்குக் களமொன்றே நினைவில் நிற்கும் போர்முடிந்து பகைதணியும் நாளில் தோன்றும் தூயவர்க்கு நம்நினைவு; நீவ யிற்றில் தோன்றிவளவர் பொழுதத்தே எனைப்பி ரிந்த சேயவர்க்குப் பெண்பிறந்த தென்று பொய்ம்மை செப்பியதே நான்செய்த பிழையாம்’ என்றாள்.253 ‘ஏனம்மா பொய்ம்மொழிந்தீர்? மொழிந்த பின்னர் என்னபயன் கண்டீர்நீர்? தந்தை யின்றி நானம்மா துயர்கின்றேன்; எனக்குச் செய்த நன்மைஎனக் கொண்டீரோ? விந்தை’ என்றான்; மீனம்போல் விழியுடையாள் அவனை நோக்கி ‘மெய்ம்மொழியின் உனையங்கே அழைத்துச் செல்வார்; கானம்போல் பாலையைப்போல் என்றன் வாழ்வு காய்ந்துவிடும் என்றஞ்சிச் சொன்னேன்’ என்றாள்.254 ‘இத்தனைநாள் இவற்றையெலாம் என்பாற் சொல்லா தேன்மறைத்தீர்? இதற்கென்ன சொல்வீர்’ என்றான்; ‘வித்தகன்மா வேழற்கு மகன்நீ என்று வேந்தனவன் பெருங்கனகன் அறியு மாயின் எத்துயரும் விளைத்திடுவன் நினக்கென் றெண்ணி ஈதறியா வண்ணமுனை வளர்த்தோம் ஐய! அத்தனைநீ அறிகுவையேல் ஈங்கு வேந்தன் அறியும்வகை பரவிவிடும் அதனால்’ என்றாள்.255 ‘மாவேழன் மகனாநான் அம்மா! அம்மா! மாவீரன் பெற்றெடுத்த மைந்தன் என்ற நாவாழ்க வாழ்க’எனக் களித்து நின்று, ‘நானிலத்துப் பெருமறவன் பெற்றான் என்று கோவேந்தன் அறிந்தாலென்? குற்ற மில்லை; கூறவொணாப் பெருமையலால் இழிவொன் றில்லை; சாவாத புகழுடையான் பெற்ற பிள்ளை தகவுடையன் தனிமறவன் என்ன வாழ்வேன்.256
சேயவர் - தொலைவில் உள்ளவர். துயர்கின்றேன் - துயரப்படுகின்றேன், |