மாமன்னன் எண்ணத்துக் குடந்தை யாக மாவலியும் தடவலியும் இசைந்தா ராகி, ஆமென்ன உறுதிமொழி தந்து நின்றார்; அரசனொரு முடங்கல்வரைந் தவர்பால் தந்து, போமென்ன, அப்பணியைத் தலைமேற் கொண்டு போர்த்தலைவர் முறுவலன்பால் புக்கு நின்று கோமன்னன் தந்ததிரு வோலை தந்தார்; கோளரியும் விரித்ததனை நோக்க லுற்றான்.279 |