378 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
பணிவோரை ஒருநாளும் கொல்ல ஒவ்வேன் பகைஎனினும் பிழைத்துப்போ!’ என்று கூறிப் பணியாளர் தமையழைத்துக் ‘கோடன் கையில் பற்றுவிலங் கணிவித்துக் கொண்டு செல்க! துணிவாளன் இவனைஒரு காவல் செய்க! துயரேதும் தாராமல் பேணு’ கென்று தணியாத திறலுடையன் ஆணை யிட்டான்; தாள்பணிந்தவ் வேவலர்தாம் கொண்டு சென்றார்.290 பொருகளத்தில் நகர்த்தலைவன் தோல்வி கண்டான்; பொருதலர்முன் இறந்திலனாய் இரந்தான் என்ற அருவருக்கும் புன்மொழிகள் நகர மெங்கும் அலராகிப் பரவியது; பெண்ணும் ஆணும் ‘சிறுபகைவற் காற்றாமல் தோற்றுப் போன சீரிழந்த வெண்கோடன், உயிருக் காக உறுபகைக்குப் பணிந்துவிட்டான் மான மில்லான் உலுத்த’னென ஊரெல்லாம் வெறுத்து ரைத்தார்.291
துணிவாளன் என்றது எள்ளற் குறிப்பு, அலர் - பழிமொழி |