அரிவைஎனப் பிறந்தனைநீ! செங்க ளத்தில் ஆடவரோ டமர்புரிதல் ஒல்வ தாமோ? உரிமைஎனக் கூறுவைநீ! ஒவ்வேன் ஒவ்வேன்; உடலமைப்பின் இயல்புணர்ந்து நடத்தல் வேண்டும்; அரியசெயல் பலசெய்தல் இயல்வ தேனும் அமர்புரிதல் முறையன்று பேதாய்’ என்றான்; புரிசமரில் பலர்முன்னர்த் தோல்வி காணப் புழுங்கினள்நெஞ் சழுங்கினளப் பூவை நல்லாள்.301 |