| 386 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 67 மானத்தி உரைத்தமொழி உண்மை என்று தான்நத்திப் பின்தொடர்ந்தான் தடந்தோள் வீரன். சிறைவிடுத்தஅம்மகள்தான் சொன்ன வண்ணம் செய்வதென உடன்பட்டுத் தலைய சைத்து விரைபுரவிக் குசைதொட்டுத் திருப்பி விட்டாள்; வில்விடுத்த அம்பெனவே அதுபாய்ந் தோட, உறைவிடுத்த வாளேந்தி வயமா வேறி உரமுடையான் அவளைப்பின் தொடர்ந்து சென்றான்; இரைபிடிக்க விரைந்துவரும் மீனைப் போல எழில்மகளைத் தொடர்ந்ததவன் இளைய உள்ளம்308 சடைவிரிந்த கருங்குழலும், திரண்டு ருண்டு சாயல்மிகும் இருதோளும், புறத்தின் பாங்கும், இடைசுருங்கிப் பொலியழகும், குசையைப் பற்றி எழிலாகப் பரிசெலுத்தும் இயல்பும் நோக்கி, இடையிடையில் அவள்திரும்பிப் பார்க்குங் காலை இளையவன்அவ் ஒருபாதி முகத்திற் சொக்கி, நடைமெலிந்த புரவியினை நோக்கா னாகி, நனவிழந்து கனவுலகில் தொடர்ந்து சென்றான்.309
குசை - கடிவாளம், சாயல் - அழகு. |