இயல் - 69 கோளரியின் வஞ்சினத்தைக் கேட்டோர் அஞ்சிக் கூடியொரு சுருங்கைவழி தப்பிச் சென்றார். வெஞ்சினத்தான் வெகுண்டுரைத்த வஞ்சி னத்து வீரமொழி மானத்தி தந்தைக் கெட்ட, அஞ்சுளத்து முதியனவன் காளை நாளை அணுகுமுனம் வழிதேட வேண்டு மென்று நெஞ்சகத்துச் சிந்தித்தான் வழியுங் கண்டான்; நினைத்தவெலாம் தொகுத்தொருங்கே வரைந்த ஓலை கஞ்சுகத்து மறவன்பால் தந்து, நாட்டுக் காவலன்பால் தருகவெனப் பணித்த பின்னர், 316 மற்றவரை அழைப்பித்து நிலைமை கூறி, ‘மாற்றலர்பாற் சிக்காமல் தப்பிச் செல்ல உற்றதொரு சுருங்கைவழி புக்குச் செல்லின் ஊர்கடந்து மூவகத்தை அடைத லாகும்; சொற்றபடி வஞ்சினத்தை முடிக்கும் ஆற்றல் சூரன்பால் உளதறிவீர்; இதை விடுத்தால் முற்றுமழிந் தொழிந்திடுதல் உறுதி’ என்றான்; மொழியுமுனம் எல்லாரும் சுருங்கை புக்கார். 317
வஞ்சினம் - சபதம், அஞ்சுளம் - அஞ்சும் உள்ளம், கஞ்சுகம் - சட்டை நாட்டுக்காவலன் - மதலைக்கோ. சுருங்கை - சுரங்கம். |