பக்கம் எண் :

வீரகாவியம்391

முனைமுகத்து மானத்தி தொடுத்து விட்ட
      மொய்ம்புமிகு கணையெல்லாம் தடுத்து விட்டான்;
நனைமுகத்து மலர்க்கணையைத் தடுத்தல் ஆற்றான்
      நலிவுமிகச் சுழன்றடிக்கும் புயலிற் சிக்கிக்
கனைகடற்கண் தடுமாறும் கலமே போலக்
      கையற்று நிலைகலங்கித் தளர்ந்தி ருந்தான்;
நினைவகத்து நில்லாமல் உழல்வோற் கண்டு
      நிகழ்ந்ததனை மாவலியன் வினவி நின்றான்.321


நனை - தேன். கனைகடல் - ஒலிக்கின்றகடல், கலம் - மரக்கலம். கையற்று - செயலற்று.