பக்கம் எண் :

வீரகாவியம்393

வீரந்தான் விரும்புதியோ? காதல் ஒன்றே
      மேலாக விழைந்தனையோ? இரண்டில் ஒன்றைத்
தேருங்கால் மற்றொன்றை விடுதல் வேண்டும்;
      சேயிழையின் காதலொன்றே வேண்டு மென்றால்
பாரஞ்சும் கைவாளைத் தரையில் வீசு!
      பணிந்துவிடு மாற்றலர்க்கு! வீர மென்றால்
போரஞ்சாத் திறல்காட்டு! வாளைத் தூக்கு!
      புகல்மறவன் கோளரியின் பெயரை நாட்டு!’’325