பக்கம் எண் :

396கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

மீளியிவன் எதிர்நிற்கும் ஆற்ற லுள்ளார்
      வேழனன்றி ஒருவரிலர்; கோட்டை தன்னை
நாளையழித் தொழிப்பனென வஞ்சி னத்தான்
      நவின்றுள்ளான்; வேழனும்வந் துதவி செய்ய
வேளையிது போதாது; வீரன் வந்து
      விடலையொடு பொருவனெனக் காத்து நிற்பின்
ஆளியிவன் வாளுக்கே இரையாய் வீழ்வோம்;
      ஆதலினால் சுருங்கைவழி தப்பி விட்டோம்’.331


மீளி - வீரன். விடலை - தலைவனாகிய கோளரி, ஆளி - சிங்கம் போன்ற விலங்கனைய கோளரி.