பக்கம் எண் :

398கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 75

விரைந்திவண் வந்த வீரன் அனைத்தும்
வேழன் றன்பால் விளம்பினன் எடுத்தே.

சொல்லேந்தித் தூதுசெலும் வீரன், காற்றுத்
      தோல்விபெற விரைகின்ற புரவி ஏறி,
மல்லேந்தும் திண்டோளான் வேழன் வைகும்
      மாநகராம் தண்டலத்தை எய்தி யங்குக்
கல்லேந்தும் உடலானைக் கண்டு தங்கள்
      காவலன்சொல் செய்திஎலாம் எடுத்துச் சொல்வான்
‘வல்லேந்திப் பொருமறவ! நமது நாட்டை
      வயப்படுத்தப் போர்தொடுக்க ஒருவன் வந்தான்.334

முறுவலனாம் கோளரிஎன் றொருபேர் தாங்கும்
      மொய்ம்புடையன் வெண்ணகரைப் பற்றிக்கொண்டான்;
உறுவலிய கோடனையும் சிறையில் வைத்தான்;
      உருவத்தால் உனைநிகர்த்தே விளங்கு கின்றான்;
தெறுசமரில் எனைப்பொருவார் மூவ கத்தில்
      தேர்மறவர் எவரேனும் உளரோ என்று
தறுகணனாய் அறைகூவல் விடுத்து நின்று
      தருக்குற்று வருகின்றான் நாடு நோக்கி.335

செருக்குற்றுத் தருக்குமொழி பேசி வந்த
      சீயத்தின் வலியானை அடர்த்துத் தாக்கி
வெருக்கொண்டு வெந்காட்டி ஓடப் பண்ணும்
      விறலுடையார் நினையன்றி யாரோ உள்ளார்?
உருக்குற்ற நின்தோளால் தாக்குற் றாங்கே
      உடன்றுவரும் அவ்விளைஞன் வீழ்தல் வேண்டும்;
நெருக்குற்று நாடுழலும் காலை ஈங்கு
      நீயிருத்தல் முறையன்றாம்; எழுக வீர!336


வல் - ஒரே காலத்தில் பலரை வீழ்ந்தும் வலிமை. சீயம் - சிங்கம், வெந்காட்டி - முதுகுகாட்டி, விறல் - வலிமை,