400 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் 76 கோளரி யாரென ஐயங் கொண்டு காளையை வேழன் கழறினன் வியந்தே. எனவுரைத்த மொழிகேட்டு நின்ற வேழன் எல்லையிலா வியப்புற்றுத் திகைத்து நின்றான்; ‘கனவகத்தும் எனைப்பொருத நினைவோன் றன்னைக் கண்டதிலை நாவலத்தில் இந்நாள் மட்டும்; எனைநிகர்க்கும் ஏந்தலென நுவலு கின்றான்; யாவனவன்? என்மனைவி வேல்வி ழிக்குத் தனயனிலை பெண்மகவே பிறந்த தென்றாள்; தந்துரைத்த மொழிபொய்யோ?பொய்யோ சொல்வாள்!339 மகனென்றால் தனிமகிழ்வு கொள்ளுந் தாயர் மகளென்று பொய்மொழியத் துணிவார் கொல்லோ? மகனென்றால் எனைத்தேடி வாரா தின்னும் மறைந்தங்கு வைகுவனோ? வந்தே சேர்வன்; மகனென்றால் இவனன்றோ மகனே யாவன்; மகவெனக்குப் பெண்ணாகப் பிறந்த தந்தோ! மகனிவன்றான் யாவன்?யாண் டிருந்து தோன்றி மல்லுக்கு வருகின்றான்? விந்தை! விந்தை!’340
ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன், |