பக்கம் எண் :

402கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

ஒல்லையில்நாம் செல்வமென உரைத்த மாற்றம்
      ஒன்றேனும் அவன்செவியிற் புகுத வில்லை;
எல்லையிலாக் களிப்புடனே ஆடிப் பாடி
      எக்களிப்பு மீதூர விருந்த யர்ந்தான்;
எல்லனையான் ஈரிருநாள் கழிந்த பின்றை
      இனிதெழுந்து போர்க்கோலம் பூண்டு நின்று
வல்லியம்போல் மறவர்புடை சூழ வந்தான்
      மாமன்னன் மதலைக்கோ நகரை நோக்கி.344


ஒல்லையில் - விரைவில், எல் - சூரியன். வல்லியம் - புலி.