408 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் 81 மாவேழன் சினந்தணிந்தான் மன்னன் றானும் மனமகிழ்ந்தான் இனிதுரைத்தான் விருந்தும் தந்தான். அஞ்சிவிட்டான் என்றமொழி கேட்ட வேழன் ஆர்ப்பரித்தான் ‘அறிவுடையீர்! யாருக் கச்சம்? நெஞ்சுவிட்டுப் போகவிலை என்றன் வீரம்! நெருப்பனைய வீரத்தைப் பழித்தல் வேண்டா! தஞ்சமெட்டுத் திசைதேடிப் பகைவர் ஓடச் சமர்செய்வேன் திறல்காட்டி வாகை கொள்வேன்; விஞ்சிவிட்ட முதுமைஎன துடலுக் கன்றி விளைந்துவரும் வீரத்துக் கில்லை’ என்றான்.360 மன்னவனும் வந்தவனைக் கெஞ்சி நின்று மன்றாடி ‘நாடுனக்குச் சொந்த மன்றோ? சொன்னமொழி பொறுக்க’எனக் குழைந்து நின்றான்; சூரனுந்தன் மனமிளகி ‘நாட்டிற் காக முன்னமுரை இகழ்மொழியை மறந்து விட்டேன்; மொழிகஉம தாணை’என வேந்து வந்தே ‘என்னுயிரின் அனையோய்நின் வீரம் வாழ்க! இனியமருக் கெழுவதலால் வேறொன் றில்லை.361 பொழுதுபுலர்ந் தெழுங்கதிரோன் முகத்தைக் காட்டப் போர்முரசம் நின்றார்க்கும்; படைகள் கூட்டி விழுதுவிடும் பழுமரம்போல் நிற்கு முன்றன் வீரமெலாம் பயன்படுத்தப் போர்மேற் செல்க! தொழுதுவரும் தாயகத்தின் துயரம் போக்கத் தோள்கொடுப்பாய்! பகைவர்க்குப் பாழ்கொ டுப்பாய்! இழுதுபடும் விருந்துண்போம் வாவா இன்றே!’ எனமொழிந்து மறவனுடன் சென்றான் மன்னன்.362 படையெழுச்சிப் படலம் முற்றும்
தஞ்சம் - புகலிடம். பழுமரம் - ஆலமரம், இழுது - கொழுப்பு. |