410 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 82 மூவகத்தார் படையெடுத்து வரல றிந்து முறுவலனாம் கோளரிதான் முகம லர்ந்தான். விளர்த்துவரும் வானத்தைச் செம்மை யாக்கி விரிகதிரோன் ஒளிப்பிழம்பாய் மேலெ ழுந்தான்; வளர்த்துவரும் போர்த்திறமை மிக்க காளை மாவலியோ டுலவிவரும் பொழுது, வான விளக்கினையும் மறைப்பதுபோல் தூசி வெள்ளம் வெளிவானிற் படரக்கண் டுசாவி நின்றான்; தளத்துயரும் ஓரரங்கில் ஏறி நின்று தன்துணையாம் மாவலியன் நோக்கிச் சொல்வான்.363 ‘கரைபுரண்டு வருகின்ற வெள்ளம் போலக் கனன்றபெரும் படையொன்று நம்மை நோக்கித் திரைபுரண்ட கடலொலிபோல் ஆர்ப்பெ ழுப்பிச் சீறியிவண் வருகின்ற’தென்று கூறத் தரைவியந்த கோளரியும் ஏறி நின்று தாங்கரிய கடலொன்று வருதல் கண்டான்; கரைகடந்த மகிழ்ச்சியினால் உரத்துக் கூவிக் கள்ளுண்டு களித்தான்போல் துள்ளிச் சென்றான்.364
உசாவி - வினவி. திரை - அலை. இவண் - இங்கே |