பக்கம் எண் :

412கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

மாற்றலர்தம் வீரன்போல் உடைய ணிந்து
      மாற்றுருவில் பகைப்புலத்துப் படைவெள் ளத்தில்
ஏற்றுடலன் பிறரறியா தொளிந்து சென்றான்;
      ஏந்தலுறை பாசறையை அறிந்து கொள்ள
ஆற்றகிலான் ஒவ்வொன்றும் உற்று நோக்கி
      அரியேற்றின் உறைவிடத்தைக் கண்டு கொண்டான்;
காற்றிலசை பாசறையின் திரையை நீக்கிக்
      கண்செலுத்திக் கூர்ந்ததனுள் நோக்கி நின்றான்.368


ஏற்றுடலன் - ஏறுபோன்ற உடலுடையவேழன். ஏந்தல் - கோளரி. ஆற்றகிலான் - முடியாமல்.