414 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
புறம்போந்த இளவேலன் இன்னும் இங்குப் போதருதல் புரிகிலனே! என்னோ! என்று மறந்தோய்ந்த மாமல்லன் தேடு கென்று வயவருக்குப் பணியிட்டான்; தேடிச் சென்றோர் நிறம்பாய்ந்த பேரடியால் குருதி சிந்தி நெடும்பிணமாய்க் கிடந்தானைத் தூக்கி வந்தார்; ‘அறந்தேய்ந்து போனதுவோ? இருளில் யாரும் அறியாமற் கொலைசெய்த வஞ்சர் யாரோ?372 பழிநாணாச் செயல்செய்ய மூவ கத்துப் பாராள்வோன் ஏவியுளான்; இதற்கு நாளை வழிகாணா தவனைவிடேன்; வஞ்ச நெஞ்சன் வாய்விட்டுக் கதறும்வரை அடித்துக் கொல்வேன்; இழிவான செயல்செய்யத் துணிந்தான் பாவி!’ எனமொழிந்தான் வெஞ்சினத்துக் காளை யன்னான்; விழிகாணா தொளிந்தங்கு வந்த வேழன் விரைந்தேகித் தன்னரசன் பாடி சேர்ந்தான்.373
இன்னே - இப்பொழுதே. மாமல்லன் - மற்போர்வல்ல கோளரி. வயவர் - வீரர், நிறம் - மார்பு, குருதி - இரத்தம், பாடி - பாசறை. |