பக்கம் எண் :

416கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

எனுமொழிக்கு மதலைக்கோன் தலைய சைத்தே
      இசைவளித்தான்; மறுத்துரைப்பின் புலந்து மீண்டும்
சினமெடுத்துச் சென்றாலும் செல்வ னென்றே
      செய்வதொன்றும் அறியாமல் எழுந்து சென்றான்;
தினவெடுத்த திண்டோளர் தருக்கி நின்று
      செயும்போரை எதிர்நின்று காண்பான் போல
முனமடுத்த இருளென்னுந் திரையை நீக்கி
      முகங்காட்டிச் செங்கதிரோன் எழுந்து வந்தான்.377