418 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
‘பசுமையுடன் பளபளக்கும் பாடி வீடு பணிவரிய மாவேழற் குரிய தன்றோ? அசதியுனக் கழகாமோ? மொழிக’என்ன, ‘ஆமாம்அப் பாசறையும் இதுவே போலப் பசியதுதான்’ எனமழுப்பி நின்றா னங்கே; பதுங்குகின்றான் உண்மைசொல எனவு ணர்ந்தோன், ‘உசவுமெனக் குண்மைநிலை யுரைத்து, வீரன் உறைவிடமுங் காட்டுதியேல் நன்றாம்’ என்றான்.381 ‘யானுமவன் பாடியைத்தான் தேடு கின்றேன் யாண்டுமது தோன்றவிலை; தன்ன கர்க்குப் போனஅவன் இன்னுமிவண் வந்தா னல்லன் போலுமெனக் கருதுகின்றேன்; வேழன் நெஞ்சில் ஆனதுனி தணவாத கார ணத்தால் அவ்வுழைநின் றகலாமல் இருத்தல் கூடும்; கோனவனோ டடுத்தடுத்துப் பிணங்கி நின்று குழப்புவது வழக்கம்’எனக் கூறி நின்றான்.382
அசதி - மறதி, உசவும் - வினவும், துனி - பகை, தணவாத - நீங்காத, உழை - இடம், கோன் - அரசன். |