பக்கம் எண் :

420கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 88

கோளரி மதலைக் கோவின் பாசறை
பாழுறச் செய்தனன்; பதறினன் மன்னன்.

செலும்வழியில் மதலையுறை கூடங் கண்டான்;
      சேர்துணையாம் இளவேலை மாய்த்த தெண்ணிக்
கொலும்நினைவால் அதைநோக்கிப் பாய்ந்தான்; அந்தக்
      கோளரியின் கூக்குரலைக் கேட்ட வீரர்
கலமிழந்து, வேங்கையினைக் கண்ட மான்கள்
      கலைந்தோடும் நிலைபோலச் சிதறிச் சென்றார்;
எலும்பதிர நகைத்தவனாய் வேந்த னைக்கண்
      டெதிர்பொருதத் திறமிருப்பின் வருக’ என்றான்.385

மன்னவனோ மறுமொழியோ புறத்து வாயில்
      வாராத காரணத்தால் சினந்து செம்மல்,
‘மன்னவனோ நீயுமொரு கோழை’ என்று
      வலிகொண்டு வல்லீட்டி வீசி விட்டான்;
சின்னபின்ன மாகியது கூடம்; மன்னன்
செயலொன்றும் அறியானாய் அஞ்சி யோடி
ஒன்னலனை ஓட்டுதற்கு வேழன் தன்னை
ஓடோடி அழைத்துவரப் பணித்து நின்றான்.386


மதலை - மதலைக்கோ, இளவேல் - இளவேலன், கலம் - படைக்கலம், ஒன்னலன் - பகைவன்,